Monday, December 30, 2013

புதுச்சேரி கடற்கரையில் தினமலர் மெகா கோலப்போட்டி





புதுச்சேரியில் மெகா கோலப்போட்டி; பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

பதிவு செய்த நாள்: டிசம்பர் 29, 2013, 11:01 IST

புதுச்சேரி: தினமலர் நாளிதழ் மற்றும் புதுச்சேரி சுற்றுலா துறை இணைந்து மெகா கோலப்போட்டி நடத்தியதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 

மார்கழி மாதத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் நடந்த இந்த போட்டியில் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். 

ரங்கோலி, புள்ளி, மற்றும் டிசைன் போன்ற பிரிவுகளின் கோலப்போட்டி நடத்தப்பட்டது. 

இதில் தவளகுப்பத்தை சேர்ந்த தீபா (டிசைன்பிரிவு), விழுப்புரத்தை சேர்ந்த சுமதி கோபால் (ரங்கோலி), அரியங்குப்பத்தை சேர்ந்த செல்வி ஆறுமுகம் (புள்ளி) ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். 

வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலா துறை அமைச்சர் ராஜவேலு பரிசுகள் வழங்கினார். சுற்றுலா வளர்ச்சி கழக சேர்மன் வையாபுரி மணிகண்டன், இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Courtesy_

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Search our Blog here

Google